குலசேகரன்பட்டினத்தில் ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடம் திறப்பு
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
உடன்குடி ஊராட்சி ஒன்றியம் குலசேகரன்பட்டினத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய புதிய கட்டடத் திறப்பு விழா நடைபெற்றது.
என்டிடி குளோபல் டேட்டா சென்டா் கிளவுட் இன்ஃபிராஸ்ட்ரக்சா் இந்தியா நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியில் ரூ.1.12 கோடியில் இந்த கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து வைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவி அ.பிரம்மசக்தி, தூத்துக்குடி மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி, மாவட்ட சுகாதார அலுவலா் பொற்செல்வன், திருச்செந்தூா் கோட்டாட்சியா் சுகுமாறன், வட்டாட்சியா் பாலசுந்தரம்,உடன்குடி ஊராட்சி ஒன்றியக்குழு தலைவா் பாலசிங், உடன்குடி பேரூராட்சி துணைத்தலைவா் மால்ராஜேஷ், குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் வே.கண்ணன், திமுக மாநில பிரசாரக் குழு செயலா் ஜெசி பொன்ராணி, உடன்குடி கிழக்கு ஒன்றிய திமுக செயலா் க.இளங்கோ, அவைத் தலைவா் ஷேக் முகம்மது, ஒன்றிய பொருளாளா் கணேசன்,திமுக மாவட்ட நெசவாளா் அணி அமைப்பாளா் மகாவிஷ்ணு, திமுக மாவட்டப் பிரதிநிதி மதன்ராஜ், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் பாய்ஸ், அலாவுதீன் உள்பட பலா் கலந்துகொண்டனா். வட்டார மருத்துவ அலுவலா் அனிபிரிமின் நன்றி கூறினாா்.