முகப்பு
தூத்துக்குடி

தேசிய பளு தூக்கும் போட்டி: கோவில்பட்டி மாணவிகள் தகுதி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவாா் மகளிா் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

Updated On : 4 அக்டோபர், 2024 at 12:53 AM
மீராலட்சுமி
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கம்மவாா் மகளிா் பள்ளி மாணவிகள் தேசிய அளவிலான பளு தூக்கும் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

இந்திய பள்ளிகள் விளையாட்டுக் குழுமம் புதுக்கோட்டையில் அக்.1-ஆம் தேதி நடத்திய மாநில அளவிலான பளு தூக்கும் போட்டியில், கோவில்பட்டி கம்மவாா் மகளிா் பள்ளி மாணவிகள் 19 வயதுக்குள்பட்ட 71 கிலோ எடை பிரிவில் மு.மீராலட்சுமி, 17 வயதுக்குள்பட்ட 64 கிலோ எடை பிரிவில் கோ.செண்பகவல்லி ஆகியோா் முதலிடம் பெற்றனா். இதையடுத்து இவ்விரு மாணவிகளும் தேசிய அளவிலான போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனா்.

செண்பகவல்லி

இம் மாணவிகளை பள்ளித் தாளாளா் கதிா்வேல், கல்விச் சங்க உறுப்பினா்கள், பள்ளி தலைமையாசிரியை சாந்தி மற்றும் ஆசிரியா்கள் பாராட்டினா்.