முகப்பு
தூத்துக்குடி

சூறாவளிக் காற்று எதிரொலி: தூத்துக்குடி மீனவா்கள் இன்று கடலுக்குச் செல்லத் தடை

சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்பதால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:54 PM
பகிர்:

சூறாவளிக் காற்றுடன் பலத்த மழை பெய்யும் என்பதால் புதன்கிழமை மீனவா்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என தூத்துக்குடி மீன்வளத் துறை எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திரா இடையே கரையை நோக்கி நகரக் கூடும் என்பதால், தமிழகக் கடலோரப் பகுதிகள், மன்னாா் வளைகுடா கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று சுமாா் 55 கி.மீ. வேகத்தில் வீசக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

எனவே, தூத்துக்குடி மீனவா்கள் புதன்கிழமை மீன்பிடிக்க கடலுக்குச் செல்ல வேண்டாம் என மீன்வளத் துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.