முகப்பு
இந்தியா

ஈரான் போர் எதிரொலி: இன்று 350 விமானங்கள் ரத்து - மத்திய அரசு

மார்ச் 1 - ஒரேநாளில் உள்நாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் ரத்து!

Updated On : 1 மார்ச், 2026 at 5:57 PM
விமானங்கள் ரத்து - AP
பகிர்:
Updated On : 1 மார்ச், 2026 at 5:34 PM

இந்திய விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் இன்று (மார்ச் 1) ஒரேநாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன.

அமெரிக்கா, இஸ்ரேல்- ஈரான் இடையேயான ராணுவ தாக்குதல்கள் தொடங்கியதையடுத்து மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் அசாதாரண சூழல் நிலவுகிறது. ஏர் இந்தியா, இண்டிகோ உள்பட முக்கிய விமான சேவைகள் அனைத்தும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு இயக்கப்படவில்லை. இதன் எதிரொலியாக, சென்னை விமான நிலையத்திலிருந்து துபை, தோஹா, அபு தாபி, பஹ்ரைன் செல்லும் விமானங்கள் பிப். 28 ரத்து செய்யப்பட்டன.

Updated On : 1 மார்ச், 2026 at 5:39 PM

இந்நிலையில், இது குறித்து, சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம் இன்று (மார்ச் 1) வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய கிழக்கு பிராந்தியத்தில் வான் வெளியைப் பயன்படுத்த முடியாத சிக்கலான சூழல் நிலவுவதையடுத்து, இந்திய உள்நாட்டு விமான நிறுவனங்களால் இயக்கப்படும் 350 விமானங்கள் இன்று (மார்ச் 1) ரத்து செய்யப்பட்டுள்ளன. பயணிகளுக்குத் தேவையான ஆதரவை அளிக்கவும் நிலைமையைக் கண்காணிக்க ஏதுவாகவும் சிவில் விமான நிலையங்கள், விமான நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து விமானப் போக்குவரத்து அமைச்சகம் செயல்பட்டு வருகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

summary

total of 350 flights operated by Indian domestic carriers have been cancelled on 01.03.2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.