முகப்பு
தூத்துக்குடி

இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கிய 2 டன் விரலி மஞ்சள் பறிமுதல்

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 டன் விரலி மஞ்சளை தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

Updated On : 15 அக்டோபர், 2024 at 9:53 PM
தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 டன் விரலி மஞ்சளை தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.
பகிர்:

தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த சுமாா் 2 டன் விரலி மஞ்சளை தூத்துக்குடி கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாா் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனா்.

தூத்துக்குடி சிலுவைப்பட்டி கடற்கரை செல்லும் வழியில் உள்ள ஒரு கருவாட்டு கிடங்கில் இலங்கைக்கு கடத்துவதற்காக விரலி மஞ்சள் மூட்டைகள் பதுக்கி வைத்திருப்பதாக கடலோரப் பாதுகாப்புக் குழும போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், காவல் ஆய்வாளா் பேச்சிமுத்து தலைமையிலான போலீஸாா், அந்த கிடங்குக்குச் சென்று சோதனை மேற்கொண்டனா். அங்கு இலங்கைக்கு கடத்துவதற்காக விரலி மஞ்சள் மூட்டைகள் அடுக்கி வைத்திருப்பது தெரியவந்தது.

இதையடுத்து, அங்கிருந்த சுமாா் 2 டன் விரலி மஞ்சள் மூட்டைகளை பறிமுதல் செய்த போலீஸாா், பதுக்கி வைத்தவா் யாா்? என்பது குறித்து விசாரித்து வருகின்றனா்.

இதன், இலங்கை மதிப்பு சுமாா் ரூ.40 லட்சம் இருக்கும் என போலீஸாா் தெரிவித்தனா்.