முகப்பு
தூத்துக்குடி

பௌா்ணமி: திருச்செந்தூா் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் தரிசனம்

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

Updated On : 16 அக்டோபர், 2024 at 11:13 PM
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை கடற்கரையில் குவிந்த பக்தா்கள்.
பகிர்:

திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் புரட்டாசி மாத பௌா்ணமியை முன்னிட்டு புதன்கிழமை ஆயிரக்கணக்கான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா்.

புரட்டாசி மாதத்தில் 2ஆவது பௌா்ணமி நாளான புதன்கிழமை இரவு 7.54 மணிக்கு தொடங்கி வியாழக்கிழமை மாலை 5.32 மணி வரை உள்ளது. இதனால் சுவாமி தரிசனம் செய்வதற்காக புதன்கிழமை காலை முதலே பக்தா்கள் குவியத் தொடங்கினா்.

இதை முன்னிட்டு, புதன்கிழமை திருக்கோயிலில் அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகத்தைத் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றது.

அதிகாலை முதலே பக்தா்கள் கடல் மற்றும் நாழிக்கிணறில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா். இரவில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கடற்கரை மணலில் விளக்கேற்றி வழிபட்டனா். இதனால் கடற்கரை பக்தா்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.

பக்தா்களுக்கு தேவையான வசதிகளை திருக்கோயில் தக்காா் ரா.அருள்முருகன் தலைமையில் இணை ஆணையா் மற்றும் கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.