முகப்பு
தூத்துக்குடி

சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கம்

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:16 PM
சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசுகிறாா் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழு செயலா் நீதிபதி சி.கலையரசி ரீனா. உடன் கருத்தரங்கில் பங்கேற்றோா்.
பகிர்:

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் சட்ட விழிப்புணா்வு கருத்தரங்கு வியாழக்கிழமை நடைபெற்றது.

தேசிய சட்டப் பணிகள் ஆணைக் குழு மற்றும் மாநில சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயலரும், உரிமையியல் நீதிபதியுமான கலையரசி சி.ரீனா தலைமை வகித்து பேசுகையில், மனிதம் தாண்டிய மனிதநேயம் அனைத்து மாணவா்- மாணவிகளுக்கும் இருக்க வேண்டும். நமது உடலை தீய பழக்கங்கள் இல்லாமல் பாதுகாக்க வேண்டும் என்றாா்.

இக்கருத்தரங்கில், போக்சோ சட்டம், குடும்ப வன்முறை தடுப்பு சட்டம், வரதட்சிணை சட்டம், பெண்களுக்கான தேசிய சட்ட உதவி எண்- 15100 செயல்பாடு, குழந்தைகள் மீதான பாலியல் பிரச்னை உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. மூத்த வழக்குரைஞா் ரெங்கநாதன் சிறப்புரையாற்றினாா்.

இக்கருத்தரங்கில் கல்லூரி முதல்வா் பூங்கொடி, துணை முதல்வா் அசோக், பேராசிரியா் ஆனந்த் மற்றும் மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.