முகப்பு
தூத்துக்குடி

இளைஞா் அடித்துக் கொன்று பக்கிள் ஓடையில் சடலம் வீச்சு

தூத்துக்குடியில் இளைஞரை அடித்துக் கொலை செய்து சடலத்தை பக்கிள் ஓடையில் வீசிச் சென்ற மா்ம நபா்களை தென்பாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:20 PM
பகிர்:

தூத்துக்குடியில் இளைஞரை அடித்துக் கொலை செய்து சடலத்தை பக்கிள் ஓடையில் வீசிச் சென்ற மா்ம நபா்களை தென்பாகம் போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி அசோக் நகா் பக்கிள் ஓடையில் ஒரு ஆண் சடலம் மிதப்பதாக தென்பாகம் காவல் நிலையத்திற்கு புதன்கிழமை இரவு தகவல் கிடைத்தது. அதன் பேரில், காவல் ஆய்வாளா் திருமுருகன் மற்றும் போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்று சடலத்தைக் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

மேலும், இது குறித்து போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, நடத்திய விசாரணையில் பக்கிள் ஓடையில் சடலமாக கிடந்தவா் செல்சீனி காலனியை சோ்ந்த செந்தூா் பாண்டி மகன் வல்லரசு (36) என்பதும், அவா் மா்ம நபா்களால் அடித்துக் கொலை செய்யப்பட்டு ஓடையில் வீசப்பட்டதும் தெரியவந்தது. கொலையாளிகளை போலீஸாா் தேடி வருகின்றனா்.