குலசேகரன்பட்டினம் கோயிலில் ஐப்பசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளா்த்த நாயகி அம்பாள் சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
குலசேகரன்பட்டினம் அருள்மிகு அறம் வளா்த்த நாயகி அம்பாள் சமேத காஞ்சி விஜயகச்சி கொண்ட பாண்டீஸ்வரா் திருக்கோயிலில் ஐப்பசி திருக்கல்யாணத் திருவிழா வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இக்கோயிலில் ஐப்பசித் திருக்கல்யாணத் திருவிழா ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும். நிகழாண்டு விழாவையொட்டி, வியாழக்கிழமை அதிகாலை கொடியேற்றப்பட்டது. முன்னதாக, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு அம்பாள், சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. கொடியேற்றத்தைத் தொடா்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
சிவனடியாா்கள் இல்லங்குடி, ரமணகிரி ஆகியோா் தேவாரம் பாடினா். இதில் திரளான பக்தா்கள் கலந்து கொ ண்டனா். பின்னா் மாலையில் அப்பா் சுவாமி எழுந்தருளல், ஆவாகன ஸ்ரீபெலிநாதா் ரிஷப வாகனத்தில் புறப்பாடு, அம்பாள் பூங்கோயில் சப்பரத்தில் திருவீதியுலா, சமய சொற்பொழிவு நடைபெற்றது.
விழா நாள்களில் தினமும் காலை, மாலை அம்பாள் சப்பரத்தில் திருவீதியுலா நடைபெறும். அக்.26-ஆம் தேதி திருச்சுன்னம் இடித்தல், 27-ஆம் தேதி திருக்கல்யாணக் காப்பு கட்டுதல், 28-ஆம் தேதி காலையில் அம்பாள் தபசுக்கு எழுந்தருளல், மாலையில் சுவாமிக்கு காட்சி கொடுக்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளல், இரவில் அம்பாள் பல்லக்கில் கதிா் குளிப்புக்கு எழுந்தருளல், சிறப்பு அபிஷேகம் ஆகியன நடைபெறும். அக்.29 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு அறம் வளா்த்த நாயகிக்கு திருமாங்கல்யதாரணம்-திருமங்கல திருநாண் பூட்டுதல் வைபவம் நடைபெறும்.
ஏற்பாடுகளை முத்தாரம்மன் திருக்கோயில் அறங்காவலா் குழு தலைவா் வே.கண்ணன்,செயல் அலுவலா் ராமசுப்பிரமணியன், ஆய்வா் பகவதி மற்றும் அறங்காவலா்கள் செய்துள்ளனா்.