முகப்பு
தூத்துக்குடி

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழப்பு

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:25 PM
பகிர்:

குரும்பூா் அருகே மின்சாரம் பாய்ந்து இளைஞா் உயிரிழந்தாா்.

ஸ்ரீவைகுண்டம் அருகே சிறுத்தொண்டநல்லூா் கிழக்குத் தெருவைச் சோ்ந்த கண்ணன் மகன் கருவேல்முத்து (26). இவா் சேதுக்குவாய்த்தானில் உள்ள தனது நண்பா் இசக்கிராமன் என்பவரது மெக்கானிக் கடையில் வேலை பாா்த்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை வேலை பாா்த்துக் கொண்டிருந்தபோது, அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். புகாரின்பேரில் குரும்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.