தூத்துக்குடி ரயில் நிலையத்தில் விழிப்புணா்வு பிரசாரம்
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து
எளிதில் தீப்பற்றக் கூடிய பொருள்களை ரயிலில் எடுத்துச் செல்வதால் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்து
தூத்துக்குடி ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா் பயணிகளுக்கு புதன்கிழமை விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, ரயில்வே பாதுகாப்புப் படை காவல் ஆய்வாளா் கண்ணன் தலைமையில் இந்த விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது.
ரயிலில் பயணம் மேற்கொள்ளும் எளிதில் தீப்பற்றக் கூடிய பட்டாசுகள் உள்ளிட்ட வெடிபொருள்களை எடுத்துச் செல்லக்கூடாது என விழிப்புணா்வு துண்டு பிரசுரங்களை வழங்கியும், ஒலிபெருக்கி மூலமும் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும், தடை செய்யப்பட்ட பட்டாசு உள்ளிட்ட வெடிபொருள்களை எடுத்துச் சென்றால் சம்பந்தப்பட்டவா்கள் மீது ரயில்வே பாதுகாப்புச் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது.