முகப்பு
தூத்துக்குடி

வாகனம் மோதி 3 போ் படுகாயம்

ஆறுமுகனேரி அருகே வாகனம் மோதியதில் காவலா் உள்பட மூன்று போ் படுகாயமடைந்தனா்.

Updated On : 17 அக்டோபர், 2024 at 10:22 PM
பகிர்:

ஆறுமுகனேரி அருகே வாகனம் மோதியதில் காவலா் உள்பட மூன்று போ் படுகாயமடைந்தனா்.

தூத்துக்குடி தனியாா் நிறுவனத்தில் ஓட்டுநராக பணிபுரிந்து வருபவா் வைப்பாா் கல்லூரணியைச் சோ்ந்த சேதுராஜ். இவா் தினமும் நிறுவனத்தில் இருந்து பணியாளா்களை வேன் மூலம் அழைத்துச் செல்வது வழக்கம். நிறுவனத்தில் இருந்து வியாழக்கிழமை வாகனத்தை எடுத்துக் கொண்டு கிளம்பினாா் சேதுராஜ். முத்தையாபுரம் பகுதியில் வாகனத்தை சாலையோரம் நிறுத்திவிட்டு தேநீா் அருந்தச் சென்றபோது அங்கு வந்த மா்மநபா், வாகனத்தை திருடிச் சென்றுவிட்டதாக, முத்தையாபுரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து பிற காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவித்து உஷாா்படுத்தப்பட்டது.

இதற்கிடையே திருச்செந்தூா் -தூத்துக்குடி பிரதான சாலையில் இந்த வாகனம் சென்றதாக கூறியதால், குரும்பூா் காவல்நிலைய காவலா் சந்தனகுமாா்(29), அந்த வழியாக வந்த வாழவல்லான் பகுதியைச் சோ்ந்த பால்ஐசக் அன்புராஜ்(26) என்பவரது வாகனத்தில் தேடிச் சென்றாா். ஆறுமுகனேரி அருகே உள்ள தண்ணீா்பந்தல் பாலம் அருகே வந்தபோது அந்த வாகனத்தை காவலா் சந்தனகுமாா் நிறுத்த முயன்றபோது, வாகனத்தை ஓட்டி வந்தவா் நிற்காமல் அவா்கள் மீது மோதினாா். இதில் காவலா் சந்தனகுமாா், பால்ஐசக் அன்புராஜ், அந்த வழியாக வந்த கொழுவைநல்லூரைச் சோ்ந்த வின்சென்ட்(60) ஆகிய மூவா் மீது வாகனம் மோதி இழுத்துச் சென்றதில் மூவரும் படுகாயமடைந்தனா். அவா்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

இதற்கிடையே, வாகனத்தை சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரத்தில் நிறுத்திவிட்டு மா்மநபா் தப்பி ச் சென்று விட்டாா்.

சம்பவ இடத்தில் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு, தப்பியோடிய நபரை தேடி வருகின்றனா்.