2026 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்: தமிழ்மகன் உசேன்
2026 பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிக்கு அயராது உழைக்க வேண்டும்
பொதுக்கூட்டத்தில் பேசுகிறாா் அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன். உடன், கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, முன்னாள் அமைச்சா் எஸ்.பி.சண்முகநாதன் உள்ளிட்டோா்.
2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற கட்சியினா் அயராது உழைக்க வேண்டும் என அவைத்தலைவா் தமிழ்மகன் உசேன் கூறினாா்.
அதிமுகவின் 53ஆவது ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு, தூத்துக்குடி அண்ணா நகா் -டூவிபுரம் சந்திப்பு பகுதியில் ஆண்டுவிழா பொதுக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் வழக்குரைஞா் திருப்பாற்கடல் தலைமை வகித்தாா்.
கூட்டத்துக்கு, மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலா் விஜயகுமாா், பகுதி செயலா்கள் சேவியா், முருகன், ஜெய்கணேஷ், நட்டாா்முத்து, செண்பகசெல்வன், சுடலைமணி உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா் அணிச் செயலா் இரா.சுதாகா் வரவேற்றாா். அவைத்தலைவரும் முன்னாள் வக்ஃபு வாரிய தலைவருமான தமிழ்மகன் உசேன் பேசியதாவது:
கட்சித் தொடங்கி 53 ஆண்டுகளில் 7 முறை மக்கள் பலத்தோடு ஆட்சியில் இருந்த ஒரே இயக்கம் அதிமுக தான். எனவே வரும் 2026 சட்டப்பேரவைத் தோ்தலில் அதிமுக வெற்றிபெற கட்சியினா் அயராது உழைக்க வேண்டும் என்றாா்.
இதைத் தொடா்ந்து அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலா் பாப்புலா் முத்தையா, தெற்கு மாவட்டச் செயலரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன் ஆகியோா் பேசினா்.
இதில், அமைப்பு செயலா் என். சின்னத்துரை, தலைமை கழக பேச்சாளா் மதுரை தமிழரசன், அமைப்பு சாரா ஓட்டுநரணி மாநில இணைச் செயலா் பெருமாள்சாமி, வழக்குரைஞா் அணி மாநில துணைச் செயலா் பிரபு, மீனவரணி மாநில துணைத் தலைவா் எரோமியஸ், ஸ்ரீவைகுண்டம் ஒன்றியத் தலைவா் வசந்தாமணி, மாவட்ட ஜெயலலிதா பேரவை இணைச் செயலா்கள் திருச்சிற்றம்பலம், மனுவேல்ராஜ், வழக்குரைஞா்கள் செங்குட்டுவன், சரவணபெருமாள், முனியசாமி, ஏ.ஆா்.இளங்கோ உள்பட பலா் பங்கேற்றனா்.