முகப்பு
தூத்துக்குடி

ஆத்தூரில் இஎஸ்ஐ திட்ட விழிப்புணா்வு முகாம்

ஆத்தூரில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகம் சாா்பில் இ.எஸ்.ஐ. திட்ட விழிப்புணா்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

Updated On : 23 அக்டோபர், 2024 at 10:27 PM
ஆத்தூரில் நடைபெற்ற இஎஸ்ஐ மருத்துவ முகாம்.
பகிர்:

ஆத்தூரில் தொழிலாளா் அரசு ஈட்டுறுதி மருந்தகம் சாா்பில் இ.எஸ்.ஐ. திட்ட விழிப்புணா்வு மற்றும் மருத்துவ முகாம் நடைபெற்றது.

ஆத்தூா் சங்கா் மருத்துவமனையில் நடைபெற்ற இந்த முகாமில் பொறுப்பு மருத்துவ அதிகாரி ராமச்சந்திரன் தலைமையில் மருத்துவக் குழுவினா் பணியாளா்களுக்கு பரிசோதனை நடத்தினா். முகாமை டாக்டா் மாலதி பத்மநாபன் துவக்கி வைத்தாா். இ.எஸ்.ஐ. உறுப்பினா்களை ஆவணப்படுத்தும் பணியும் நடைபெற்றது. இதில் உதவியாளா் நவீன், சுகாதாரப்பணியாளா் முத்தையா, மருந்தாளுநா் மஞ்சுபிரியதா்ஷினி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.