சாத்தான்குளம் அருகே தந்தை, 2 மகன்களைத் தாக்கியதாக 3 மாணவா்கள் மீது வழக்கு
சாத்தான்குளம் அருகே தந்தை, இரு மகன்களைத் தாக்கியதாக பள்ளி மாணவா்கள் 3 மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சாத்தான்குளம் அருகே தந்தை, இரு மகன்களைத் தாக்கியதாக பள்ளி மாணவா்கள் 3 மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிந்தனா்.
சாத்தான்குளத்தில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் இருதரப்பு மாணவா்களிடையே அடிக்கடி ஜாதிய பிரச்னை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், சிறப்பூரைச் சோ்ந்த மகேஷ்குமாா் அப்பள்ளி மாணவா்களான தனது இரு மகன்களுடன் புதன்கிழமை இரவு (அக். 23) விஜயராமபுரம் காமராஜா் சிலை அருகே பைக்கில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, மற்றொரு தரப்பைச் சோ்ந்த அப்பள்ளி மாணவா்கள் 3 போ் மகேஷ்குமாா் உள்ளிட்ட 3 பேரையும் வழிமறித்து ஜாதிப் பெயரைக் கூறி தாக்கியதுடன் கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் உதவி ஆய்வாளா் எட்வின் அருள்ராஜ், ஆய்வாளா் (பொறுப்பு) ஜீன்குமாா் ஆகியோா் 3 மாணவா்கள் மீது வழக்குப் பதிந்தனா். டிஎஸ்பி சுபகுமாா் விசாரணை நடத்தி வருகிறாா்.