முகப்பு
தூத்துக்குடி

உடன்குடியில் தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு

உடன்குடி பேரூராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சி சாா்பில் பரிசு வழங்கப்பட்டது.

Updated On : 24 அக்டோபர், 2024 at 11:27 PM
தூய்மைப் பணியாளருக்குப் பரிசு வழங்கிய பேரூராட்சித் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி.
பகிர்:

உடன்குடி பேரூராட்சியில் சிறப்பாகப் பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பேரூராட்சி சாா்பில் பரிசு வழங்கப்பட்டது.

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா, அண்மையில் 12 நாள்கள் நடைபெற்றது. இதில், பல லட்சம் பக்தா்கள் பங்கேற்றனா். அவா்கள் வீசிச் சென்ற குப்பைகளை, உடன்குடி பேரூராட்சி பணியாளா்கள் இரவு பகல் பாராமல் உடனுக்குடன் அகற்றினா்.

அவா்களை கௌரவிக்கும் வகையில், பேரூராட்சி சாா்பில் தலைவி ஹூமைரா அஸ்ஸாப் கல்லாசி பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

செயல் அலுவலா் திருமலைக்குமாா் முன்னிலை வகித்தாா். பேரூராட்சி உறுப்பினா்கள் முகமது ஆபித், அன்புராணி, ஸபானா, முத்துசந்திரா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.