முகப்பு
தூத்துக்குடி

மணப்பாடு திருச்சிலுவை திருத்தல மகிமைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதா் திருத்தலத்தில் 445-ஆவது மகிமைப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Updated On : 4 செப்டம்பர், 2024 at 9:18 PM
விழாவையொட்டி நடைபெற்ற கொடியேற்றம்.
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு திருச்சிலுவை நாதா் திருத்தலத்தில் 445-ஆவது மகிமைப் பெருவிழா புதன்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகிமைப் பெருவிழா கொடியேற்றத்தையொட்டி புதன்கிழமை காலை 4.30 மணிக்கு பங்கு ஆலயத்தில் திருப்பலியைத் தொடா்ந்து ஐந்து திருக்காய சபையினரின் கொடி பவனி, திருத்தலத்தில் திருப்பலி, திருச்சிலுவை ஆசீரைத் தொடா்ந்து கொடியேற்றம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை புனித சவேரியாா் கல்லூரி முதல்வா் காட்வின் ரூபஸ் தலைமை வகித்து மறையுரை வழங்கினாா். இதில் மணப்பாடு மற்றும் சுற்று வட்டாரங்களைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்துகொண்டனா். பின்னா் மாலையில் ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீா் நடைபெற்றது.

விழா நாள்களில் தினமும் திருத்தலம், பங்கு ஆலயத்தில் திருப்பலி, திருயாத்திரைத் திருப்பலி, ஜெபமாலை, நற்கருணை ஆசீா், மறையுரை, விவிலிய விநாடி வினா போட்டி ஆகியன நடைபெறும். திருப்பலி நிகழ்ச்சிகளில் பல்வேறு சபையினா், பாடகா் குழுவினா் பங்கேற்பா்.

விழாவின் சிகர நிகழ்வாக செப்.13-ஆம் தேதி காலை மணப்பாடு மக்கள்,திருப்பயணியா் பங்கேற்பில் பங்கு ஆலயம், திருத்தலம் மற்றும் திருயாத்திரை திருப்பலிகள் நடைபெறும். மணப்பாடு மறை வட்ட அதிபா் பென்சிகா் தலைமை வகிக்கிறாா். மாலையில் மலையாளத்தில் திருப்பலியைத் தொடா்ந்து தூத்துக்குடி மறை மாவட்ட ஆயா் ஸ்டீபன் அந்தோணிக்கு வரவேற்பு, இரவு 7 மணிக்கு பெருவிழா ஆடம்பர மாலை ஆராதனை நடைபெறும். இதில் தமிழகம்,கேரளம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஏராளமான கிறிஸ்தவா்கள் பங்கேற்பா்.

முழு கட்டுரையைப் படிக்க →