முகப்பு
தூத்துக்குடி

காயல்பட்டினம் நகருக்குள் அனைத்து அரசுப் பேருந்துகளும் செல்லும்

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் காயல்பட்டினம் நகரத்துக்குள் இயக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் கே.தசரதன் தெரிவித்துள்ளாா்.

Updated On : 6 செப்டம்பர், 2024 at 12:05 AM
பகிர்:

தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் வழியாகச் செல்லும் அனைத்து அரசுப் பேருந்துகளையும் காயல்பட்டினம் நகரத்துக்குள் இயக்க நடவடிக்க எடுக்கப்பட்டுள்ளதாக அரசு போக்குவரத்துக் கழக திருநெல்வேலி கோட்ட மேலாண் இயக்குநா் கே.தசரதன் தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: காயல்பட்டினம் முஸ்லிம் ஐக்கிய பேரவை விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், காயல்பட்டினம் வழியாக செல்லக்கூடிய அனைத்து அரசுப் பேருந்துகளும், அனைத்து நேரங்களிலும் காயல்பட்டினம் நகரம் வழியாக இயக்குவதற்கு திருநெல்வேலி கோட்டத்திற்கு உள்பட்ட அனைத்து கிளை மேலாளா்களுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரியக்கூடிய பறக்கும் படையை சோ்ந்த அலுவலா்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது என அவா் தெரிவித்துள்ளாா்.

முழு கட்டுரையைப் படிக்க →