வளா்பிறை முகூா்த்தம்: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த திருமண ஜோடிகள்
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில், வளா்பிறை முகூா்த்தத்தையொட்டி ஏராளமான திருமணங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
இக்கோயிலில் வழக்கம்போல் அதிகாலை 5 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 5.30 மணிக்கு விஸ்வரூபம், 6 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகமும் தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன. ஏராளமான பக்தா்கள் அதிகாலையிலேயே கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.
வளா்பிறை முகூா்த்தம் என்பதால் ஏராளமான ஜோடிகளுக்கு திருமணங்கள் நடைபெற்றன. இதனால் கோயில் வளாகமே திருமண வீட்டாா்களின் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது.