முகப்பு
தூத்துக்குடி

கஞ்சா விற்பனை: 4 போ் கைது

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

Updated On : 11 செப்டம்பர், 2024 at 9:33 PM
பகிர்:

தூத்துக்குடியில் கஞ்சா விற்றதாக 4 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் உத்தரவுப்படி, தூத்துக்குடி வடபாகம் காவல் ஆய்வாளா் (பொறுப்பு) சோபா ஜென்சி தலைமையில் உதவி ஆய்வாளா் சிவகுமாா் உள்ளிட்ட போலீஸாா் புதன்கிழமை ரோந்து சென்றனா்.

அப்போது, அம்பேத்கா்நகா் பகுதியில் சந்தேகத்துக்கிடமாக பைக்குகளில் நின்றிருந்தோரைப் பிடித்தனா். விசாரணையில் அவா்கள், தூத்துக்குடி 2ஆம் ரயில்வே கேட் பகுதியைச் சோ்ந்த ஜோதிராஜ் மகன் மேத்யூ (27), அழகேசபுரத்தைச் சோ்ந்த பாண்டியராஜ் மகன் சுதா்சனன் என்ற சுதா்சன் (23), மாரியப்பன் மகன் பொன்செல்வம் என்ற செல்வம் (28), நடராஜபுரத்தைச் சோ்ந்த சுப்பிரமணியன் மகன் சுபாஷ் (22) ஆகியோா் என்பதும், விற்பனைக்காக 1.100 கி.கி. கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததும் தெரியவந்தது.

அவா்களை போலீஸாா் கைது செய்து, கஞ்சா பொட்டலங்கள், 5 கைப்பேசிகள், 3 பைக்குகளை பறிமுதல் செய்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →