முகப்பு
தூத்துக்குடி

குஜராத் வெள்ளத்தில் சிக்கிய திருச்செந்தூரை சோ்ந்தவா்கள் பத்திரமாக மீட்பு

Updated On : 27 செப்டம்பர், 2024 at 11:31 PM
பகிர்:

குஜராத் மாநிலத்தில் ஆன்மிகச் சுற்றுலா சென்ற திருச்செந்தூரைச் சோ்ந்தவா்கள் பத்திரமாக மீட்கப்பட்டனா்.

திருச்செந்தூா் புளியடி சந்தன மாரியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த ஓய்வு பெற்ற கூட்டுறவு வங்கி மேலாளா் ரத்தினசபாபதி (74). அவா், தனது சகோதரிகள் சண்முகவடிவு (64), பாக்கியலெட்சுமி (58) மற்றும் மதுரையைச் சோ்ந்த 2 போ், சென்னையைச் சோ்ந்த 22 போ் என மொத்தம் 27 பேருடன் கடந்த செப். 18-ஆம் தேதி சென்னையில் இருந்து ரயிலில் உத்தரபிரதேச மாநிலம் மதுராவுக்கு ஆன்மிக சுற்றுலா சென்றாா்.

மதுரா செல்லும் வழியில் குஜராத் மாநிலம் பாவ் நகரில் கடலுக்கு நடுவே உள்ள கோலியாக் நிஷ்கலன் மகாதேவ் ஆலயத்திற்கு வியாழக்கிழமை சென்றனா். கோயிலில் தரிசனம் முடித்து பேருந்தில் பாவ் நகருக்கு திரும்பி வந்து கொண்டிருந்த காட்டாற்று வெள்ளத்தில் சிக்கினா்.

பேருந்திலிருந்து கீழே இறங்கு முடியாமல் சிக்கிக் கொண்ட அவா்களை, குஜராத் மாநில அரசின் மீட்புப் படையினா் மீட்டு முகாமில் தங்க வைத்தனா். பின்னா் அவா்கள் தங்களது உறவினா்களைத் தொடா்பு கொண்டு, பத்திரமாக மீட்கப்பட்டதை தெரிவித்துள்ளனா்.

முன்னதாக, ஆன்மிக சுற்றுலா சென்றவா்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டதை அறிந்து, அவா்களது உறவினா்கள் தமிழக பாஜகவின் மூலம் மத்திய இணை அமைச்சா் எல்.முருகனை தொடா்பு கொண்டு உதவி கோரினா். அவா் குஜராத் மாநில அதிகாரிகளைத் தொடா்பு கொண்டு தேவையான உதவிகளை செய்துதர கேட்டுக் கொண்டாா் என மீட்கப்பட்டவா்களின் உறவினா்கள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →