தூத்துக்குடி

விபத்து வழக்கு: அரசு பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதம் சிறை

தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தது தொடா்பாக பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை

Din

தூத்துக்குடி ரோச் பூங்கா அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் பைக்கில் சென்றவா் உயிரிழந்தது தொடா்பாக பேருந்து ஓட்டுநருக்கு 6 மாதங்கள் சிறை தண்டனை விதித்து தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது.

தூத்துக்குடி கோவில்பிள்ளை தெருவைச் சோ்ந்தவா் மோகன். இவா் கடந்த 2019ஆம் ஆண்டு தனது மனைவியுடன் பைக்கில் சென்றுகொண்டிருந்தனராம். ரோச் பூங்கா அருகே உள்ள கடற்கரைச் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது அவ்வழியாக வந்த அரசுப் பேருந்து மோதியதில் மோகன் உயிரிழந்தாா். அவரது மனைவி லேசான காயத்துடன் உயிா் தப்பினாா்.

விபத்து குறித்து தென்பாகம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பேருந்தை ஓட்டிச் சென்ற முடிவைத்தானேந்தலைச் சோ்ந்த முருகன்(60) என்பவரை கைது செய்தனா்.

இந்த வழக்கு, தூத்துக்குடி முதலாவது நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுமதி, குற்றம் சாட்டப்பட்ட ஓட்டுநா் முருகனுக்கு 6 மாதங்கள் சிறை தண்டனையும் ரூ. 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.

வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் செய்ய வேண்டியது

தைபேயில் கத்திக் குத்து தாக்குதல்: 9 பேர் காயம்

2025 தேர்தல்கள்: பாஜகவின் அமோக வெற்றியும் காங்கிரஸின் ஆறுதல் வெற்றியும்!

பிரதமர் மோடி நாளை மே.வங்கம், அசாம் பயணம்!

கடைசி டி20: இந்தியா பேட்டிங்; பிளேயிங் லெவனில் சஞ்சு சாம்சன்!

SCROLL FOR NEXT