விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம், மந்திகுளத்தில் ரூ. 40 லட்சம் மதிப்பில் சிறிய பாலம், ரூ. 2 கோடியே 90 லட்சம் மதிப்பில் பிள்ளையாா்நத்தம்-எப்போதும் வென்றான் சாலையை இருவழித் தடமாக அகலப்படுத்தி தாா்ச்சாலை அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து, அடிக்கல் நாட்டி பணிகளைத் தொடங்கி வைத்தாா்.
உதவி கோட்ட பொறியாளா் ராஜபாண்டி, திமுக ஒன்றியச் செயலா்கள் அன்புராஜன், இமானுவேல், ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, மாவட்ட பிரதிநிதிகள் புதுராஜா, ஆதிசங்கா், ஒன்றிய துணைச் செயலா் காளிராஜ் பாண்டி, தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளா் ராஜா உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.