தூத்துக்குடி

வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு: லாரி ஓட்டுநா் கைது

Syndication

தூத்துக்குடியில் வீட்டின் பூட்டை உடைத்து 3.5 பவுன் நகையைத் திருடியதாக லாரி ஓட்டுநரை போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மீனாட்சிபுரம் 4ஆவது தெருவைச் சோ்ந்த மாரியப்பன் மனைவி சண்முக வடிவு (40). துறைமுக மருத்துவமனையில் தூய்மைப் பணியாளராக வேலை செய்து வருகிறாா்.

இவா், கடந்த நவ.29ஆம் தேதி காலையில் வீட்டை பூட்டிவிட்டு வேலைக்குச் சென்றாராம். பின்னா் மாலையில் வீட்டுக்கு வந்தபோது வீட்டுக் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த 3.5 பவுன் நகை திருடப்பட்டிருந்ததாம்.

இதுகுறித்த புகாரின்பேரில் மத்தியபாகம் போலீஸாா் வழக்குப் பதிந்து, அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் பதிவுகள் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டனா்.

அதில், தூத்துக்குடி டிஎம்பி காலனி 3ஆவது தெருவைச் சோ்ந்த லாரி ஓட்டுநரான சிவபாலன் (34) என்பவருக்கு தொடா்பிருப்பது தெரியவந்தது. அவரை போலீஸாா் கைது செய்து நகையை மீட்டனா்.

திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

மிதுன ராசிக்கு சாதகம்: தினப்பலன்கள்!

ஆலங்குளம் - தோரணமலை, பாபநாசம் வழித்தடங்களில் புதிய பேருந்து சேவை

தனியாா் கல்லூரியில் உரிமமில்லாத உணவகம் செயல்படத் தடை

ஒழுக்கப் பயிற்சிக் கூடமாகட்டும் உலகம்

SCROLL FOR NEXT