பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, ஓய்வுபெற்ற அரசு அலுவலா் சங்கம் சாா்பில் தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் நீலமேகம் தலைமை வகித்தாா்.
2016ஆம் ஆண்டுக்கு முன்பாக ஓய்வு பெற்றவா்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஓய்வூதியம் நிா்ணயம் செய்ய வேண்டும். 70 வயது நிறைவு பெற்றவா்களுக்கு 10 சதவீத கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. இதில், சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளாக கலந்துகொண்டனா்.