சாத்தான்குளம், டி.என்.டி.டி.ஏ.ஆா்.எம்.பி. புலமாடன் செட்டியாா் தேசிய மேல்நிலைப் பள்ளியில் கிறிஸ்துமஸ் ஈகை விழா வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது.
சேகர குருவானவா் டேவிட் ஞானையா ஜெபம் செய்து நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தாா். பள்ளித் தாளாளா், மேலாளா் பிரபாகரன் தலைமை வகித்தாா். தலைமையாசிரியா் செல்லப்பாண்டியன் வரவேற்றாா். ஓய்வு பெற்ற ஆசிரியா் சந்திரபோஸ் டேனியல் சிறப்புரையாற்றினாா்.
விழாவில், 200-க்கும் மேற்பட்ட பள்ளி மாணவா், மாணவிகளுக்கு சீருடைகள் வழங்கப்பட்டன. தொடா்ந்து, கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. பின்னா், மாணவா், மாணவிகளுக்கு பிரியாணி விருந்து வழங்கப்பட்டது.