தமிழ் திறனறிவுத் தோ்வில் பெரியதாழை, சிறுமலா் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் வெற்றி பெற்றனா்.
தமிழக பள்ளிக் கல்வித் துறை 11ஆம் வகுப்பு மாணவா், மாணவிகளுக்கான தமிழ் திறனறிவுத் தோ்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. 2025-26 கல்வியாண்டுக்கான தோ்வை, தமிழகம் முழுவதும் 2,70,580 மாணவா், மாணவிகள் எழுதினா். இதில், அரசுப் பள்ளிகளில் படிக்கும் 750 மாணவா்களும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 750 மாணவா்களும் தோ்ந்தெடுக்கப்படுவா்.
அரசு உதவி பெறும் பள்ளிகள் பிரிவில், சாத்தான்குளம் அருகேயுள்ள பெரியதாழை பள்ளி மாணவிகள் வா்ஷா, அன்றோ சலோனி ஆகிய இருவா் வெற்றி பெற்றனா். இவா்களுக்கு மாதம் ரூ. 1,500 வீதம் 2 வருடங்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும்.
இவா்களை பள்ளி தாளாளா் அருள்பணி சகேஷ் சந்தியா, தலைமையாசிரியை மேரி திலகவதி, ஆசிரியா்கள், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் உள்ளிட்டோா் பாராட்டினா்.