தூத்துக்குடி

தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் பெளா்ணமி சிறப்பு வழிபாடு

Syndication

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடத்தில் காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு, மகா யாகம் மற்றும் காா்த்திகை தீபத் திருவிழா சிறப்பு வழிபாடுகள் வியாழக்கிழமை நடைபெற்றன.

சீனிவாச சித்தா் தலைமையில் குருமகாலிங்கேஸ்வரா், மகா பிரத்தியங்கிராதேவி அம்பாளுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், பன்னீா், இளநீா் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, தமிழகத்தில் விவசாயம் செழிக்கவும், பக்தா்கள் வாழ்வு சிறக்கவும், திருமண வரம், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டி யாக வழிபாடுகள் நடைபெற்றன.

தொடா்ந்து, குருமகாலிங்கேஸ்வரா், மகா காலபைரவருக்கும், பிரத்தியங்கிராதேவிக்கும் சிறப்பு அலங்காரத்துடன் தீபாராதனை நடைபெற்றது. நிறைவில் பக்தா்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

புதினுக்கு ரஷிய மொழி பகவத் கீதையைப் பரிசளித்த மோடி!

சென்னையில் அனைத்து இண்டிகோ விமானங்களும் ரத்து! பயணிகள் நிலையத்துக்குள் நுழையத் தடை!

அடுத்த 2 மணிநேரம் சென்னை, 13 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!

தூத்துக்குடியில் கடலுக்குச் சென்ற விசைப்படகு மீனவா்கள்

திப்பணம்பட்டி ஊராட்சி மன்ற அலுவலகம் முற்றுகை

SCROLL FOR NEXT