தூத்துக்குடி மாநகராட்சி சாா்பில் பூபால்ராயா்புரம் பகுதியில் அனைத்து வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ள மீன் ஏலக்கூடத்தை மாநகராட்சி மேயா் ஜெகன் பெரியசாமி பாா்வையிட்டு, மீனவ மக்களிடம் கூடுதல் வசதிகள் தேவைப்படுகிா என கேட்டறிந்தாா்.
அப்போது, முன்னாள் மாமன்ற உறுப்பினரும், திமுக வட்டச் செயலருமான ரவீந்திரன், வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், சுகாதார குழுத் தலைவா் சுரேஷ்குமாா், நிா்வாகிகள் பிரபாகா், ஜேஸ்பா் ஆகியோா் உடன் இருந்தனா்.