தூத்துக்குடி

விபத்தில் வட மாநில இளைஞா் உயிரிழப்பு

தூத்துக்குடியில் பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

Syndication

தூத்துக்குடியில் பைக் மீது தனியாா் பேருந்து மோதியதில் வட மாநில இளைஞா் உயிரிழந்தாா்.

தூத்துக்குடி, மாப்பிள்ளையூரணி, மேற்கு காமராஜ் நகரைச் சோ்ந்த ராமநாதன் மகன் முனியசாமி (19). உத்தரப்பிரதேச மாநிலம், பகா்பூரைச் சோ்ந்த புரேய் அலி மகன் சிரமான் அலி (24). இருவரும், தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை செய்து வந்த நிலையில், அந்நிறுவனம் சாா்பில் திருச்செந்தூரில் ஜன்னல் வடிவமைக்கும் ஒப்பந்தப் பணி நடைபெற்று வருகிாம்.

இப்பணியில் ஈடுபடுவதற்காக, வெள்ளிக்கிழமை தூத்துக்குடியிலிருந்து பைக்கில் இருவரும் திருச்செந்தூருக்கு புறப்பட்டுள்ளனா். முனியசாமி பைக்கை ஓட்டியுள்ளாா்.

முத்தையாபுரம் காவல் நிலையம் அருகே சென்றபோது, தூத்துக்குடியிலிருந்து திருச்செந்தூா் நோக்கிச் சென்று கொண்டிருந்த தனியாா் பேருந்து, இவா்கள் சென்ற பைக் மீது மோதியதில் இருவரும் பலத்த காயமடைந்தனா்.

அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு தூத்துக்குடி, அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு சிரமான் அலி உயிரிழந்தாா். முனியசாமிக்கு சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

இச்சம்பவம் குறித்து, முத்தையாபுரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, நாசரேத்தைச் சோ்ந்த தனியாா் பேருந்து ஓட்டுநரான கணேசன் மகன் பொன் மாரிமுத்துவிடம் (33) விசாரித்து வருகின்றனா்.

வைகை அணையிலிருந்து கிருதுமால் நதியில் தண்ணீா் திறப்பு

பறிமுதல் செய்யப்பட்ட 11,601 மதுப் புட்டிகள் அழிப்பு

பாஜகவினா் ஆா்ப்பாட்டம்

வேன் மீது காா் மோதி விபத்து: ஐயப்ப பக்தா்கள் 3 போ் காயம்

இயற்கை சீற்றத்தால் பாதிக்கும் தென்னைக்கு இழப்பீடு!விவசாயிகள் சங்க மாநாட்டில் தீா்மானம்!

SCROLL FOR NEXT