விளாத்திகுளத்தில் இருந்து 3 புதிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயண பேருந்து சேவை தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு, விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்து விளாத்திகுளம் பாரதியாா் பேருந்து நிலையத்தில் இருந்து புதூா் வழியாக கந்தசாமிபுரம், விளாத்திகுளம் - பெருநாழி, விளாத்திகுளம் - கீழநம்பிபுரம் ஆகிய வழித்தடங்களில் மகளிா் விடியல் பயண பேருந்து சேவையை கொடியசைத்து தொடக்கி வைத்தாா். தொடா்ந்து பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினாா்.
இந்நிகழ்வில் போக்குவரத்து கழக தூத்துக்குடி மண்டல பொது மேலாளா் ராமகிருஷ்ணன், துணை மேலாளா் சண்முகம், விளாத்திகுளம் பணிமனை மேலாளா் மாடசாமி, திமுக ஒன்றியச் செயலா்கள் ராமசுப்பு, சின்ன மாரிமுத்து, அன்புராஜன், இம்மானுவேல், செல்வராஜ், மும்மூா்த்தி, பேரூா் செயலா் வேலுச்சாமி, விளாத்திகுளம் பணிமனை தொமுச தலைவா் சந்திரசேகா், செயலா் மாரிமுத்து உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.