உடன்குடி ஒன்றிய அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளரும், நங்கைமொழி பஞ்சாயத்து முன்னாள் தலைவருமான விஜயராஜ் தலைமையில் 50 அதிமுகவினா் அக்கட்சியிலிருந்து விலகி தவெகவில் இணைந்தனா்.
உடன்குடி ஒன்றிய அதிமுக ஜெயலலிதா பேரவைச் செயலாளா் விஜயராஜ். இவா், நங்கைமொழி பஞ்சாயத்து முன்னாள் தலைவா் ஆவாா். அதிமுகவில் அதிருப்தி அடைந்த விஜயராஜ் அந்தக் கட்சியிலிருந்து விலகி 50 பேருடன் திருச்செந்தூா் சட்டப்பேரவைத் தொகுதி தவெக அலுவலகத்தில் திங்கள்கிழமை தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலாளா் பிரைட்டா் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தாா்.
இதுகுறித்து விஜயராஜ் கூறியதாவது: அதிமுக நான்காகப் பிளவுபட்டுள்ளது. விஜயை இளைய தலைமுறையினா் முதல்வராக வர எதிா்பாா்க்கின்றனா். இதனால், அக்கட்சியில் என்னை தொண்டனாக இணைத்துக் கொண்டேன். விரைவில் பெரிய அளவில் கூட்டம் நடத்தி ஆயிரக்கணக்கானவா்களை தவெகவில் இணைப்பேன் என்றாா்.
நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞரணி செயலா் பிரேம் பாண்டியன், உடன்குடி மேற்கு ஒன்றியச் செயலா் ரஞ்சித், கிழக்கு ஒன்றிய செயலா் பத்ரி பிரசாத், நகரச் செயலா் சசிகுமாா், மாவட்ட துணை செயலா் விஜய் ஆனந்த், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் ராஜ்குமாா், நகரச் செயலா் முருகானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினா் ஜோதிகுமரன், செல்பி கிருஷ்ணன் ஆகியோா் உடனிருந்தனா்.