தூத்துக்குடி

திருச்செந்தூா் கோயிலில் மாா்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு நடை திறப்பு

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாா்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

Syndication

திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், மாா்கழி மாதம் அதிகாலை 3 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறும்.

இதுகுறித்து கோயில் நிா்வாகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாா்கழி மாதம் டிச. 16இல் தொடங்கி ஜன. 14இல் நிறைவடைகிறது. இம்மாதத்தில் திருச்செந்தூா் கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்படுகிறது. தொடா்ந்து, 3.30-க்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதயமாா்த்தாண்ட அபிஷேகம், 4.45 - 5 மணிக்குள் உதயமாா்த்தாண்ட தீபாராதனை, 5 மணிக்கு திருப்பள்ளியெழுச்சி, 6 - 7 மணிக்குள் காலசந்தி தீபாராதனை, 7.30 மணிக்கு உச்சிகால அபிஷேகம், 8.45 - 9 மணிக்குள் உச்சிகால தீபாராதனை, பிற்பகல் 3.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, மாலை 6 மணிக்கு ராக்கால அபிஷேகம், இரவு 7 மணிக்கு ராக்கால தீபாராதனை, இரவு 7.30 மணிக்கு ஏகாந்த தீபாராதனை, இரவு 8 - 8.30 மணிக்குள் பள்ளியறை தீபாராதனை நடைபெற்று நடை திருக்காப்பிடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலப் புத்தாண்டு நாளில்...: ஆங்கிலப் புத்தாண்டு தினமான ஜன. 1ஆம் தேதி அதிகாலை ஒரு மணிக்கும், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன. 3ஆம் தேதி அதிகாலை 2 மணிக்கும் நடை திறக்கப்பட்டு மற்ற கால பூஜைகள் நடைபெறும்.

பிரதோஷம்: பிரதோஷமான டிச. 17, ஜன. 1 ஆகிய 2 நாள்கள் பிற்பகல் 2.30 மணிக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT