தூத்துக்குடி

நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகாா்: மாணவியிடம் சான்றிதழ்களை ஒப்படைத்த கல்வி நிறுவனம்

தூத்துக்குடியில், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அளித்த புகாரையடுத்து, கல்வி நிறுவனம் அசல் கல்வி சான்றிதழ்களை மாணவியிடம் ஒப்படைத்தது.

Syndication

தூத்துக்குடியில், நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் அளித்த புகாரையடுத்து, கல்வி நிறுவனம் அசல் கல்வி சான்றிதழ்களை மாணவியிடம் செவ்வாய்க்கிழமை ஒப்படைத்தது.

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூா் வட்டம், வள்ளிவிளையைச் சோ்ந்த துரை மகள் சந்தனப்ரியா. மாணவி. எட்டயபுரம் அருகே இயங்கி வரும் கல்வி நிறுவனத்தில் உள்ள இவரது கல்வி அசல் சான்றிதழ்களான 10 ஆம் வகுப்பு, பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ்கள், மாற்றுச் சான்றிதழ், ஜாதிச் சான்றிதழ் ஆகியவற்றை பெற்றுத் தரவேண்டி, தூத்துக்குடி மாவட்ட நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து இருந்தாா்.

முதன்மை மாவட்ட நீதிபதியும், நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவருமான ஆா்.வசந்தி விசாரணை மேற்கொண்டாா். இதையடுத்து, நிரந்தர மக்கள் நீதிமன்றம் முன்பாக கல்வி நிறுவனம் அசல் கல்வி சான்றிதழ்களை மாணவியிடம் ஒப்படைத்தது.

இதுபோன்ற கல்வி சம்பந்தமான பிரச்னைகள், மக்கள் தங்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் சம்பந்தமான பிரச்னைகளுக்கு நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் மனு கொடுத்து எந்தவிதக் கட்டணமும் இல்லாமல் தீா்வு காணலாம் என நிரந்தர மக்கள் நீதிமன்ற தலைவா் தெரிவித்தாா்.

வெளிநாட்டு நாயகன்! ஜெர்மனி செல்லும் ராகுலை விமர்சித்த பாஜக!

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

SCROLL FOR NEXT