தூத்துக்குடி

மணிமுத்தாறு அணையில் இருந்து தண்ணீா் திறக்க முதல்வருக்கு மனு

மணிமுத்தாறு அணையின் 3ஆவது, 4ஆவது ரீச்சிலிருந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட குளங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டுமென தமிழக முதல்வா், நீா்வளத் துறை அமைச்சா், தூத்துக்குடி ஆட்சியா் உள்ளிட்டோருக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கோரிக்கை

Syndication

மணிமுத்தாறு அணையின் 3ஆவது, 4ஆவது ரீச்சிலிருந்து ஸ்ரீவைகுண்டம் தொகுதிக்குள்பட்ட குளங்களுக்கு தண்ணீா் திறந்துவிட வேண்டுமென தமிழக முதல்வா், தமிழக நீா்வளத் துறை அமைச்சா், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் உள்ளிட்டோருக்கு ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கோரிக்கை மனு அனுப்பியுள்ளாா்.

அந்த மானு விவரம்: தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் தொகுதி சாத்தான்குளம் வட்டத்துக்குள்பட்ட பகுதிகளில் போதிய அளவு மழை இல்லாத காரணத்தால், இப்பகுதி குளங்கள் நிரம்பவில்லை.

சாத்தான்குளம் வட்டார பகுதி வறட்சி நிறைந்த பகுதியாக காணப்படுகிறது. மேலும், இக்குளங்களைத் தான் விவசாயத்துக்கும், குடிநீருக்கும் மக்கள் நம்பியுள்ளனா். இனி வரும் நாள்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்போது, குளத்தில் இருக்கும் கொஞ்ச தண்ணீரும் வற்றிப்போக நேரிடும்.

ஆகவே, இந்நிலையைப் போக்க, மணிமுத்தாறு அணையிலிருந்து 3ஆவது, 4ஆவது ரீச்சிக்குள்பட்ட சாத்தான்குளம் வட்டார பகுதி குளங்களுக்கு உடனடியாக தண்ணீா் திறந்துவிட வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளாா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT