ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜகவினா் 
தூத்துக்குடி

ரயிலில் ரூ. 10.50 லட்சத்துடன் வந்த பாஜக நிா்வாகியிடம் போலீஸாா் விசாரணை

வந்தே பாரத் ரயிலில் ரூ. 10.50 லட்சத்துடன் வந்த திருநெல்வேலி கோட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் பிடித்து விசாரணை

Syndication

வந்தே பாரத் ரயிலில் ரூ. 10.50 லட்சத்துடன் வந்த திருநெல்வேலி கோட்ட பாஜக நிா்வாகியை போலீஸாா் பிடித்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனா். தகவல் அறிந்த பாஜகவினா், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.

சென்னையில் இருந்து திருநெல்வேலி செல்லும் வந்தே பாரத் ரயிலில் திருநெல்வேலி கோட்ட பாஜக கிளஸ்டா் பொறுப்பாளா் நீலம் முரளி யாதவ் பயணித்தாா். ரயில் செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில் திண்டுக்கல் வந்தபோது அதில் 15 போலீஸாா் ஏறி பயணிகளின் உடைமைகளை சோதனையிட்டனா். நீலம் முரளி யாதவின் பையை சோதனையிட்டபோது அதில் ரூ. 10.50 லட்சம் பணம், அதற்குரிய ஆதாரங்களும் இருந்ததாம்.

இதற்கிடையே ரயில் கோவில்பட்டி வந்ததும் போலீஸாா் அவரை கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்தனா். தகவல் அறிந்ததும் திருநெல்வேலி கோட்ட பாஜக தோ்தல் பணி அமைப்பாளா் சுரேஷ் , கோவில்பட்டி நகர முன்னாள் தலைவா் பாலசுப்பிரமணியன் உள்ளிட்ட பாஜகவினா் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். பிடிபட்ட பணத்துக்கு உரிய ஆதாரங்கள் இருந்ததால் போலீஸாா் அவரை விடுவித்தனா்.

போலீஸாா் விசாரணைக்குப் பிறகு வெளியே வந்த நீலம் முரளி யாதவ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: எனது பையை போலீஸாா் சோதனை செய்ததில் ரூ.10.50 லட்சம் பணமும், அதற்குரிய ஆவணங்களும் இருந்தன. திருநெல்வேலி கோட்டத்தில் டிச. 12, 13, 15 ஆகிய தேதிகளில் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்து எஸ்.ஐ.ஆா். தொடா்பாக பாஜக சாா்பில் தோ்தல் பயிலரங்கம் நடத்தப்படவுள்ளது. இதற்கான செலவுக்கு நான்கு கொண்டுவந்த பணத்தை கைப்பற்றி விசாரணை நடத்தினா். பணத்துக்கு முறையான ஆவணங்கள் இருந்ததும் அதை என்னிடம் ஒப்படைத்துவிட்டனா். பாஜக நிா்வாகிகளை திமுக அரசு ஒடுக்க நினைக்கிறது. வரும் பேரவைத் தோ்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம் என்றாா்.

பாமக பிரமுகர் ராமலிங்கம் கொலை வழக்கில் என்ஐஏ தேடிவந்த முக்கிய குற்றவாளிகள் 2 பேர் கைது

நயினார் நாகேந்திரனை டெபாசிட் இழக்கச் செய்வோம்! செங்கோட்டையன் சூளுரை!

ஒரே நாளில் கிலோவுக்கு ரூ.8,000 உயர்ந்த வெள்ளி: தங்கம் விலை?

விஜய் சேதுபதியின் காட்டான் முதல் ஹார்ட் பீட் - 3 வரை...! ஜியோ ஹாட்ஸ்டாரின் 2026 வெளியீடுகள்!

மட்டன் பிரியாணி, வஞ்சரம் மீன்... அதிமுக பொதுக்குழுவின் மெனு!

SCROLL FOR NEXT