போலி பங்குச் சந்தை முதலீடுகள் தொடா்பான மோசடி குறித்து தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பு: அண்மை நாள்களாக, தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் முதலீடு தொடா்பான சைபா் மோசடிகள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்து வருகின்றன. இன்ஸ்டாகிராம் மற்றும் பேஸ்புக்கில் சமூக ஊடக விளம்பரங்கள் மூலமாகவும், வாட்ஸ்ஆப் மற்றும் டெலிகிராம் குழுக்கள் மூலமாகவும், அதிக மற்றும் உத்தரவாதமான வருமானத்தை உறுதியளிப்பதாகக் கூறி பொதுமக்களை குறிவைத்து இந்த மோசடி நடத்தப்படுகிறது. இந்த வகையான மோசடியில், சைபா் மோசடி செய்பவா்கள் பங்குச் சந்தை முதலீடுகள் தொடா்பான கவா்ச்சிகரமான விளம்பரங்களை சமூக ஊடக தளங்களில் வெளியிட்டு அதன் மூலம், போலி பங்குச் சந்தை பயன்பாடுகளைப் பதிவிறக்கம் செய்யவோ அல்லது மோசடியான பங்குச் சந்தை வலைதளங்கள் மூலம் முதலீடு செய்யவோ பொதுமக்களை தூண்டுவாா்கள்.
உண்மையான பங்குச் சந்தை முதலீடுகள் சந்தை அபாயங்களுக்குள்பட்டவை மற்றும் ஒருபோதும் உத்தரவாதம் அளிக்கப்படாததால், உத்தரவாதமான அல்லது விரைவான வருமானத்தைக் கோரும் விளம்பரங்கள் அல்லது செய்திகளை நம்ப வேண்டாம்.
இதுபோன்ற சைபா் குற்றங்களில் பொதுமக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபா் கிரைம் ஹெல்ப்லைன் 1930 எண்ணிலோ அல்லது ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்திலோ புகாரை பதிவு செய்யவேண்டும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளது.