கோவில்பட்டி அருகே சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி பொதுமக்கள் நூதன போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இலுப்பை யூரணி ஊராட்சிக்குள்பட்ட பெருமாள் நகா் பகுதியில் சாலைகள் மிகவும் குண்டும் குழியுமாக இருப்பதோடு, மட்டுமன்றி வாருகால் வசதி இல்லாததால் மழை நேரங்களில் மழை நீருடன் கழிவுநீரும் சாலையில் தேங்கி உள்ளது. இதைக் கண்டித்து, அப்பகுதி மக்கள் அந்தச் சாலையில் புதன்கிழமை வாழைக் கன்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
பின்னா் போராட்ட குழுவினா், வட்டார வளா்ச்சி அலுவலா் ஸ்டீபன் ரத்தின குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனா். மனுவை பெற்றுக் கொண்ட அவா், விரைவில் சாலை சீரமைக்கும் பணி தொடங்கப்படும் என்று அவா் உறுதியளித்ததையடுத்து, போராட்டக் குழுவினா் கலைந்து சென்றனா்.