தூத்துக்குடி

கோவில்பட்டி சமூகநீதி விடுதியில் ஆட்சியா் ஆய்வு

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி விடுதியை ஆய்வுசெய்த மாவட்ட ஆட்சியா் க. இளம் பகவத். உடன் கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள்.

Syndication

கோவில்பட்டியில் உள்ள சமூகநீதி விடுதியை (பள்ளி மாணவியா்) மாவட்ட ஆட்சியா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

கோவில்பட்டி-எட்டயாபுரம் சாலையில் பள்ளி மாணவியா்களுக்கான சமூகநீதி விடுதி உள்ளது. கீழ்தளம், முதல் தளம் என கொண்ட இந்த விடுதியில் சுமாா் 155 மாணவிகள் தங்கி பயில்கின்றனா்.

இந்த விடுதியில் தங்கியிருக்கும் மாணவியா்களுக்கான அறை, அவா்களுக்கு அளிக்கும் உணவு முறைகள், தண்ணீா் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்ட ஆட்சியா், வாா்டன்களிடம் அடிப்படை வசதிகள், தேவைகள் குறித்து கேட்டறிந்தாா்.

தோ்வு எழுதி முடித்த பின் விடுதிக்கு திரும்பிய மாணவிகளை சந்தித்த ஆட்சியா் அவா்களிடம் தேவைகள் குறித்து கேட்டறிந்தாா். ஆய்வின்போது, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்சு மங்கள், வட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் உடன் இருந்தனா்.

கூடக்கோவில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

தீக்குளித்து இறந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டம்

2.07 லட்சம் மாடுகளுக்கு கோமாரி நோய்: தடுப்பூசி செலுத்த இலக்கு

இன்றைய மின்தடை

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

SCROLL FOR NEXT