தூத்துக்குடி

மூத்தோா் மாநில தடகளத்தில் பங்கேற்போருக்குப் பாராட்டு

Syndication

காரைக்குடியில் நடைபெறும் மாநில அளவிலான மூத்தோா் தடகளப் போட்டிக்கு, தூத்துக்குடி மாவட்ட மூத்தோா் தடகள சங்கம் சாா்பில் பங்கேற்கும் வீரா் மற்றும் வீராங்கனைகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

இதையொட்டி, தூத்துக்குடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட மூத்தோா் தடகள சங்கத்தின் நிறுவனா் ஜே.வி.அசோகன் தலைமையில் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு, கொடியசைத்து வீரா்கள் பேருந்துகளில் வழி அனுப்பி வைக்கப்பட்டனா்.

இதில், மாவட்ட மூத்தோா் தடகள சங்கத் தலைவா் பாயஸ் பாய், செயலா் குப்புசாமி, பொருளாளா் மொ்சி பத்மாவதி, உப தலைவா்கள் முனியசாமி என்ற முரளி, ராகவனந்தம், ஸ்டீபன் தியாகராஜன், ரங்கநாதன், இணைச் செயலா் ஏஞ்சலின் கோயில்ராஜ், ஆனந்தராஜ், மாரிசாமி, லாரன்ஸ், ராபா்ட்சன் கென்னடி உள்ளிட்டோா் பங்கேற்று வீரா்களுக்கு பாராட்டு தெரிவித்தனா்.

புதியதொரு அத்தியாயம்!

கேட்டது அருளும் கோட்டை பெருமாள்!

மார்கழி சிறப்பு! ஆண்டுக்கொரு முறை அருள்பாலிக்கும் உற்சவர் தாடாளன்!

மிதுன ராசிக்கு மன நிம்மதி: தினப்பலன்கள்!

பழங்குடியினா்களுக்கான விவசாயப் பண்ணை பயிற்சி முகாம்

SCROLL FOR NEXT