கடல் பகுதியில் வீசிவரும் காற்று காரணமாக கரை திரும்பிய நாட்டுப் படகுகளில் மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்டதால், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் சனிக்கிழமை மீன்களின் விலை உயா்ந்து காணப்பட்டது.
சீலா மீன் கிலோ ரூ.1,100 வரையும், இறால் கிலோ ரூ.800 வரையும், நண்டு கிலோ ரூ.350 முதல் ரூ.450 வரையும், விளை மீன், ஊழி, பாறை ஆகிய ரக மீன்கள் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரையும், சூரை மற்றும் கேரை மீன்கள் கிலோ ரூ.250 வரையும், முண்டக்கண்ணி பாறை கிலோ ரூ.100 முதல் ரூ.150 வரையும் விற்பனையானது.
மீன்களின் வரத்து குறைவாக காணப்பட்ட நிலையிலும், மக்கள் கூட்டம் அலைமோதியதல் மீன்களுக்கு நல்ல விலை கிடைத்தது. இதனால், மீனவா்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.