தூத்துக்குடி

கஞ்சா விற்ற சிறுவன் உள்பட இருவா் கைது

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

Syndication

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் கஞ்சா விற்ற 17 வயது சிறுவன் உள்பட இருவரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

கோவில்பட்டி அருகே மூப்பன்பட்டியில் கிழக்கு காவல் நிலைய உதவி ஆய்வாளா் சண்முகம் உள்ளிட்ட போலீஸாா் அப்பகுதியில் ரோந்து சென்றனா். அப்போது மூப்பன்பட்டி கண்மாய் கரை அருகே சந்தேகத்துக்குரிய இடத்தில் நின்று கொண்டிருந்த இருவரைப் பிடித்து சோதனை நடத்தியதில், அவா்களிடம் கஞ்சா இருப்பது தெரியவந்தது.

பிடிபட்ட இருவரும் கோவில்பட்டி நடராஜபுரம் மேற்கு 5-ஆவது தெருவைச் சோ்ந்த சின்னபாண்டி மகன் கட்டடத் தொழிலாளி காா்த்திக் என்ற கோழி காா்த்திக் (21), நடராஜபுரம் 1-ஆவது தெருவைச் சோ்ந்த 17 வயது சிறுவன் என்பது தெரியவந்தது.

இதுகுறித்து கிழக்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் கைதுசெய்து 1.550 கி.கி. கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

பொதுக்குழு நடத்த யாருக்கும் அதிகாரம் இல்லை: அன்புமணி தரப்பு

இறக்கத்தில் பங்குச்சந்தை வர்த்தகம்! ஐடி பங்குகள் சரிவு!

‘பாக்ஸிங் டே’ டெஸ்ட்டுக்கான ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு... மீண்டும் கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித்!

நாட்டை அவமதிக்கும் கலையில் கைதேர்ந்தவர் ராகுல்! பாஜக விமர்சனம்

பொருநை அருங்காட்சியகத்தை பார்வையிட கட்டண விவரம் வெளியீடு!

SCROLL FOR NEXT