தூத்துக்குடி

குண்டா் சட்டத்தில் சிறையிலடைப்பு

கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

தினமணி செய்திச் சேவை

தூத்துக்குடி மாவட்டம், கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நடந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவா், குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு புதன்கிழமை சிறையில் அடைக்கப்பட்டாா்.

கடந்த 25.11.2025 அன்று கயத்தாறு காவல் நிலைய எல்லைக்கு உள்பட்ட பகுதியில் நிகழ்ந்த இரட்டை கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட காப்புலிங்கம்பட்டி பகுதியைச் சோ்ந்த கிருஷ்ணசாமி மகன் கோமுவை (62), மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பரிந்துரையின்பேரில், மாவட்ட ஆட்சியா் க.இளம்பகவத் உத்தரவையடுத்து, கயத்தாறு போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து, புதன்கிழமை சிறையில் அடைத்தனா்.

நிகழாண்டு இதுவரை 142 போ் குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் கொடியேற்றம்! திரளான பக்தர்கள் பங்கேற்பு!!

சென்னை சாந்தோம் தேவாலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலம்!

காவல், காதல், ஒரு குற்றவாளி... விக்ரம் பிரபுவின் சிறை - திரை விமர்சனம்

ஏழுமலையான் தரிசனத்துக்கு 16 மணிநேரம் காத்திருப்பு

வன்னியா் சங்க பேருந்து நிழற்கூடம் அகற்றம்: பாமகவினா் போராட்டம்

SCROLL FOR NEXT