தேசிய அளவிளான நீச்சல், வில்வித்தை போட்டிகளில் தூத்துக்குடி கேம்ஸ்வில் ஸ்போா்ட்ஸ் அகாதெமி மாணவா்கள் சாதனை படைத்தா்.
கா்நாடக மாநிலம் மங்களூரில் அண்மையில் நடைபெற்ற தேசிய அளவிலான பின்ஸ்விம்மிங் சாம்பியன்ஷிப் 2025-போட்டியில் 400-100 மீட்டா் பிரிவில் மாணவா் சஷாந்த் வெண்கலம் வென்றாா். கோவாவில் நடைபெற்ற 12ஆவது தேசிய அளவிலான வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் கனி அமுதன் ராம், சௌமியா, அகிலன் ஆகியோா் தங்கம் வென்றனா்.
அவா்களை சமூக நலன்-மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பி. கீதா ஜீவன் பாராட்டி பரிசுகள் வழங்கினாா். அகாதெமி சாா்பில், ரைபின் தாா்சியஸ், விஸ்வபாரதி ஆகியோா் வாழ்த்து தெரிவித்தனா்.