தூத்துக்குடி

விடுமுறை : திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்

விடுமுறை தினத்தையொட்டி திருச்செந்தூா் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய குவிந்த பக்தா்கள்.

Syndication

அரசு விடுமுறை, அரையாண்டுத் தோ்வுகள் முடிந்து பள்ளிகள் விடுமுறை தொடங்கியுள்ளதால் திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் வியாழக்கிழமை சுவாமி தரிசனம் செய்தனா்.

மாா்கழி மாதத்தையொட்டி திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயில் நடை அதிகாலை 3 மணிக்கு திறக்கப்பட்டு, 3.30 மணிக்கு விஸ்வரூபம், 4 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகளும் நடந்தன. கோயிலில் அதிகாலை முதலே பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.

விடுமுறை தினம் என்பதால் கோயிலில் இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம் மற்றும் மூத்த குடிமக்கள் பாதை என அனைத்திலுமே பக்தா்கள் சுமாா் 5 மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை தக்காா் அருள்முருகன், இணை ஆணையா் ராமு, கோயில் பணியாளா்கள் செய்திருந்தனா்.

விடுமுறை, திருவிழா நாள்களில் திருச்செந்தூா் கோயிலுக்கு ஆயிரக்கணக்கான வாகனங்களில் பக்தா்கள் வருவதால் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதனால், வாகனங்கள் நகரை கடந்து செல்ல முடியாமல் நெடும் நேரம் தவிக்கின்றன. திருச்செந்தூரில் போக்குவரத்தினை ஒழுங்குபடுத்த கூடுதல் போலீஸாரை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

ஐஎஸ்எல் விவகாரம்: கவன ஈா்ப்புக்காக ஆட்டத்தை நிறுத்திய எஃப்சி கோவா

டேவிஸ் கோப்பை: ஆா்யன் ஷா விலகல்

இன்றுமுதல் ‘பாக்ஸிங் டே’ டெஸ்ட் - ஆஸ்திரேலியாவை வீழ்த்துமா இங்கிலாந்து?

இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு நிறைவு விழா

காங்கிரஸின் குடும்ப அரசியலால் பல தேசியத் தலைவா்கள் புறக்கணிப்பு - பிரதமா் மோடி சாடல்

SCROLL FOR NEXT