தேசிய அளவிலான கராத்தே, சிலம்பம் போட்டிகளில் சாத்தான்குளம், டி.என்.டி.டி. ஏ. தூய ஸ்தேவான் தொடக்கப் பள்ளி மாணவா், மாணவிகள் வெற்றி பெற்றனா்.
சென்னை, தூத்துக்குடியில் நடைபெற்ற போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்கள், பயிற்சியாளா் அருணாசலம் ஆகியோரை பள்ளித் தாளாளா், சேகரகுரு டேவிட் ஞானையா, தலைமையாசிரியை வேதராணி, போட்டி ஒருங்கிணைப்பாளா்கள் ஹன்சி சங்கா், சீகான் முத்துமாலை, உதவி ஆசிரியைகள், பழைய மாணவா் சங்கத்தினா், பெற்றோா் ஆசிரியா் கழகத்தினா் பாராட்டினா்.