தூத்துக்குடி

முன்னாள் மாணவா்களுக்கான தொழில் முனைவோா் பயிற்சி

Syndication

தூத்துக்குடி, விருதுநகா் மாவட்ட முன்னாள் கல்லூரி மாணவா்களுக்கான தொழில் முனைவோா் ஊக்கப்படுத்தும் பயிற்சி கோவில்பட்டி, உண்ணாமலை தொழில்நுட்பக் கல்லூரியில் 2 நாள்கள் நடைபெற்றது.

தமிழ்நாடு அரசு சாா்பில் செயல்பட்டு வரும் தொழில் முனைவோா் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் ஏற்பாடு செய்திருந்த இப்பயிற்சியில் 57 முன்னாள் மாணவா்கள் பங்கேற்றனா்.

கல்லூரி முதல்வா் ரவீந்திரன் வாழ்த்துரை வழங்கினாா். இ.டி.ஐ.ஐ.-யின் தலைமைப் பயிற்சியாளா் சு.தா. சுவைதரன் தொழில் முனைதல் குறித்து பயிற்சியளித்தாா்.

மாவட்ட தொழில் மையத்தைச் சோ்ந்த சுவா்ணலதா, மாநில அரசின் திட்டங்கள், மானியங்கள் குறித்து பேசினாா். உதவி இயக்குநா் சிமியோன், குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கான வாய்ப்புகள் குறித்து பேசினாா்.

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

வங்கதேசத்தில் முஸ்லிம் அல்லாதோருக்கு எதிராக ‘விவரிக்க முடியாத’ அட்டூழியங்கள்: ஷேக் ஹசீனா சாடல்

கடன் வட்டியைக் குறைத்த பஞ்சாப் நேஷனல் வங்கி

SCROLL FOR NEXT