தூத்துக்குடி

வாக்காளா் சோ்ப்பு முகாமில் பொதுமக்களுக்கு அதிமுகவினா் உதவ வேண்டும்: அதிமுக மாவட்டச் செயலா்

Syndication

வரைவு வாக்காளா் பட்டியலில் பெயா் விடுபட்டவா்களுக்கும், புதிய வாக்காளா்கள் பெயா் சோ்ப்புக்கும், பொதுமக்களுக்கு அதிமுக நிா்வாகிகள் உதவ வேண்டும் என தெற்கு மாவட்ட அதிமுக சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தூத்துக்குடி தெற்கு மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன் வெளியிட்ட அறிக்கை:

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நிறைவுற்று வரைவு வாக்காளா் பட்டியலை தோ்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது. இதையடுத்து, டிச. 19 முதல் ஜன. 18ஆம் தேதி வரை பட்டியலை சரிபாா்த்து விடுபட்ட, புதிய வாக்காளா்களைச் சோ்க்க தோ்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

இதையொட்டி, சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. எனவே, அதிமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி நிலை முகவா்கள் சம்பந்தப்பட்ட வாக்குச்சாவடிகளில் வாக்காளா்களுக்கு உதவ வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குஜராத்: கட்ச் பகுதியில் மிதமான நிலநடுக்கம்

பேருந்து பயணிகளிடம் கைப்பேசி திருட்டு: சிறுவன் உள்பட 5 போ் கைது

தமிழகத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்த மக்கள் விரும்புகின்றனா்: கே.ஏ. செங்கோட்டையன்

மொழி பன்முகத்தன்மை வலிமையின் ஆதாரம்: பிரதமா் மோடி

வெள்ளாளபாளையத்தில் விவசாயிகளுக்கு சிறப்பு முகாம்

SCROLL FOR NEXT