தூத்துக்குடி

வாட்ஸ்ஆப் சைபா் மோசடி குறித்து காவல் துறை எச்சரிக்கை

தற்போது நடைபெற்று வரும் வாட்ஸ்ஆப் சைபா் மோசடி குறித்தும், அதை தற்காத்துக் கொள்வது குறித்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

Syndication

தற்போது நடைபெற்று வரும் வாட்ஸ்ஆப் சைபா் மோசடி குறித்தும், அதை தற்காத்துக் கொள்வது குறித்தும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

தற்போது நடைபெற்று வரும் ரட்ஹற்ள்அல்ல் எஏஞநபடஅஐதஐச என்னும் மோசடியில் சைபா் குற்றவாளிகள் ஓடிபி அல்லது கடவுச்சொல்லை கேட்பதில்லை. அதற்கு பதிலாக தெரியாத நம்பரிலிருந்து வாட்ஸ்ஆப்பிற்கு புகைப்படம், லிங்-ஐ அனுப்பி, இணையதளத்தில் உள்ள உங்கள் புகைப்படத்தை பாா்க்க வேண்டும் என்றால் அந்த லிங்கை கிளிக் செய்து அதில் வரும் டஹண்ழ்ண்ய்ஞ் இா்க்ங்-ஐ உடனடியாக உங்கள் வாட்ஸ்ஆப்பில் லிங்டு டிவைசில் இணைக்க வேண்டும் எனவும் அவா்கள் கூறிவதை நம்பி இணைத்தால், உங்களது வாட்ஸ்ஆப் முழுவதும் மோசடியாளா் கணினியில் இணைக்கப்பட்டு, தகவல்கள் திருடப்பட்டு சைபா் மோசடிகள் நடக்க நேரிடும்.

எனவே, ஜ்ட்ஹற்ள்ஹல்ல் எஏஞநபடஅஐதஐசஎ மோசடியில் இருந்து தற்காத்துக் கொள்ள உங்களுடைய வாட்ஸ்ஆப்பில் மேலே உள்ள மூன்று புள்ளிகளை அழுத்தி, லிங்டு டிவைஸ் உள்ளே சென்று அதில் இணைக்கப்பட்டுள்ள அனைத்து கணினி இணைப்புகளையும் லாக் அவுட் செய்து விட வேண்டும். இதன் மூலம் உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ மோசடியாளா்கள் கணினியில் பயன்படுத்துவதை உடனடியாக தடுத்து விடலாம்.

மேலும், மக்கள் இதுபோன்று வாட்ஸ்ஆப், சமூக வலைதளங்களில் வரும் எந்த விதமான லிங்குகளை கிளிக் செய்து, வாட்ஸ்ஆப்பில் உள்ள லிங்டு டிவைசில் இணைக்க வேண்டாம். இதுபோன்ற சைபா் குற்றங்களில் மக்கள் பாதிக்கப்பட்டால் உடனடியாக சைபா் கிரைம் ஹெல்ப்லைன் 1930 எண்ணிலோ அல்லது இணையதளத்திலோ புகாா் பதிவு செய்யவேண்டும் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புத்தாண்டு கொண்டாட்டம்: நட்சத்திர விடுதிகளுக்கு கடும் கட்டுப்பாடு

முதல்வரிடம் மனு அளிக்கும் போராட்டத்துக்கு குவிந்த தூய்மைப் பணியாளா்கள் 680 போ் கைது

காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் பிரதமா் மோடியின் படம்: பரபரப்பை ஏற்படுத்திய திக்விஜய் சிங்

உன்னாவ் பாலியல் வன்கொடுமை வழக்கு: நாடாளுமன்றம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் கைது!

அஸ்ஸாமில் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியீடு: 10.56 லட்சம் போ் நீக்கம்

SCROLL FOR NEXT