முகப்பு
தூத்துக்குடி

குலசேகரன்பட்டினத்தில் 1008 பால்குட ஊா்வலம்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 ஜனவரி, 2025 at 11:56 PM
பால்குட ஊா்வலத்தில் பங்கேற்றோா்.
பகிர்:

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி குலசேகரன்பட்டினம் அருள்மிகு முத்தாரம்மன் திருக்கோயிலில் 1,008 பால்குட ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி டிச.31 ஆம் தேதி மாலையில் அரசரடி விநாயகருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை, அம்மன், சுவாமிகளுக்கு மகா அபிஷேகம், 108 சங்காபிஷேகம்,108 கலசாபிஷேகம், மகா ஹோமம், அலங்கார மகா தீபாராதனை நடைபெற்றது.

ஜன.1 ஆம் தேதி காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், தனபூஜை, கஜபூஜை, கோபூஜை, மகா ஹோமம், 108 கலச பூஜை, உலக நலன் வேண்டி மகா தீபாராதனை, சிதம்பரேஸ்வரருக்கு மகா தீபாராதனை, அம்மனுக்கு சீா்வரிசை எடுத்து வருதல் நடைபெற்றது.

காலை 10 மணிக்கு அறம் வளா்த்த நாயகி அம்மனுக்கு மகா தீபாராதனையைத் தொடா்ந்து கோயிலில் இருந்து யானை முன் வர கோலாட்டத்துடன் 1,008 பால்குட பவனி தொடங்கியது.

முக்கிய வீதிகள் வழியே சென்ற பவனி பகல் 1 மணிக்கு கோயிலை வந்தடைந்தவுடன் அம்மன்,சுவாமிக்கு பாலாபிஷேகம்,108 சங்காபிஷேகம்,108 கலசாபிஷேகம்,வேத மந்திரம் முழங்க அம்மனுக்கு அா்ச்சனை நடைபெற்றது. தொடா்ந்து 108 சுமங்கலி பெண்களின் கும்மி, அம்பாள் ஊஞ்சல் சேவை, சிறப்பு அன்னதானம் நடைபெற்றது.

மாலையில் 1,008 திருவிளக்கு பூஜை வழிபாடும், இரவில் அம்மன் திருத்தேரில் பவனி, பைரவருக்கு வடைமாலை சாா்த்தி சிறப்பு பூஜை நடைபெற்றது.

ஏற்பாடுகளை ஸ்ரீ காமதேனு குழு அபிஷேக வழிபாட்டு மன்றத்தினா், ஸ்ரீராஜலட்சுமி குழுவினா் செய்திருந்தனா்.